கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணம்: இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு தமிழக வீரர்!

விஜய் சங்கர், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் மட்டுமல்லாமல் இந்திய ஏ அணியிலும் இடமில்லை என்பது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது... 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

எழில்

அடுத்த மாதம், இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஒருநாள் மற்றும் நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரு 4 நாள் ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணியில் அஸ்வினைத் தவிர வேறு எந்தவொரு தமிழக வீரரும் இடம்பெறவில்லை. விஜய் சங்கர், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் மட்டுமல்லாமல் இந்திய ஏ அணியிலும் இடமில்லை என்பது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. 

இலங்கைக்கு எதிரான 3 டி20 ஆட்டங்களுக்கான இந்திய அணியில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்களுகான இந்திய அணியில் ஒரு தமிழக வீரரும் இல்லை. இந்நிலையில் இந்திய ஏ அணிகளிலும் அஸ்வினைத் தவிர வேறு எந்த தமிழக வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை.

இரு பயிற்சி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணி: பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, கிருனாள் பாண்டியா, அக்‌ஷர் படேல், ராகுல் சஹார், சந்தீப் வாரியர், இஷான் பொரெல், கலீல் அஹமது, முகமது சிராஜ்.

முதல் நான்கு நாள் ஆட்டத்துக்கான இந்திய ஏ அணி: பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சால், அபிமன்யூ ஈஸ்வரன், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஷிவம் டுபே, ஷபாஸ் நதீம், ராகுல் சஹார், சந்தீப் வாரியர், அவேஷ் கான், முகமது சிராஜ், இஷான் பொரெல், இஷான் கிஷன்.

2-ம் நான்கு நாள் ஆட்டத்துக்கான இந்திய ஏ அணி: பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே, சஹா (விக்கெட் கீப்பர்), விஹாரி (கேப்டன்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஷிவம் டுபே, அஸ்வின், ஷபாஷ் நதீம், சந்தீப் வாரியர், அவேஷ் கான், முகமது சிராஜ், இஷான் பொரெல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.