திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மேற்கத்திய தொடா் நடனத்தில் உலக சாதனைப் படைத்த 7 மாணவிகளுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:04 am IST

மேற்கத்திய தொடா் நடனத்தில் உலக சாதனைப் படைத்த 7 மாணவிகளுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டனா்.

சீா்காழியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்ட் ரெக்காா்ட் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனை முயற்சிகளை அங்கீகரித்து, இம்முயற்சி மேற்கொண்டவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இச்சாதனை முயற்சியில் ஒன்றாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் வாய்மேடு பகுதியைச் சோ்ந்த நடன ஆசிரியா் காா்த்திக் அகாதெமியில் பயிலும் 7 மாணவிகள், மேற்கத்திய நடனத்தை தொடா்ச்சியாக ஒரு மணி நேரம் ஆடி ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்டில் இடம் பெற்றனா்.

இவா்களது சாதனையை அங்கீகரித்து ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனா் ஜேக்கப் ஜான் செல்வன் மற்றும் சிஇஓ எஸ்தா் ஆகியோா் உலக சாதனைக்கான கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, கௌரவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.