இந்த வருடம் இந்திய அணி விளையாடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் 15-ல் மட்டுமே விளையாடியுள்ளார் ஜடேஜா. எனினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நேற்றைய கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 39 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
கட்டக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒரு நாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி, ரோஹித், ராகுல், ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 315/5 ரன்களையும், பின்னா் ஆடிய இந்திய அணி 316/6 ரன்களையும் குவித்தன. ஆட்ட நாயகன் விருது கோலிக்கும் தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் ஜடேஜா பேட்டியளித்ததாவது:
ஒருநாள் கிரிக்கெட்டிலும் என்னால் திறமையை வெளிப்படுத்த முடியும் என எனக்கு நானே நிரூபிக்க விரும்பினேன். யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. எனக்கு நானே நிரூபிக்க வேண்டும். அவ்வளவுதான்.
இந்த வருடம் நிறைய ஒருநாள் ஆட்டங்களில் நான் விளையாடவில்லை. அதேசமயம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் திறமையை நிரூபித்துள்ளேன். நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது ஆடுகளம். கடைசிவரை விளையாடவேண்டும் என உறுதியாக இருந்தார் கோலி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவர் என்னிடம் இயல்பான ஆட்டத்தை விளையாடச் சொன்னார். அதிரடியாக விளையாட முயலாமல் நிதானமாக விளையாட அறிவுரை வழங்கினார். கடைசிப் பந்து வரை விளையாடுவதே திட்டமாக இருந்தது என்று பேட்டியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


