கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஜடேஜாவிடம் ஹிந்தியில் கேள்வி கேட்டது ஏன்?: ஹர்ஷா போக்ளே விளக்கம்

ஜடேஜாவிடம் ஹிந்தியில் கேள்வி கேட்டதற்காகப் பலரும் ஹர்ஷாவை விமரிசித்தார்கள்....

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

எழில்

கட்டக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒரு நாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி, ரோஹித், ராகுல், ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 315/5 ரன்களையும், பின்னா் ஆடிய இந்திய அணி 316/6 ரன்களையும் குவித்தன. ஆட்ட நாயகன் விருது கோலிக்கும் தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபிறகு, ஸ்டார் டிவி சார்பாக ஜடேஜா, ஷர்துல் தாக்குரைப் பேட்டி கண்டார் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே. ஜடேஜாவைப் பேட்டி காணும்போது தனது கேள்வியை ஹிந்தியில் ஆரம்பித்தார் ஹர்ஷா. ஆனால், ஜடேஜா ஆங்கிலத்தில் பதில் அளித்ததால் உடனே தனது கேள்வியை ஆங்கிலத்துக்கு மாற்றிக் கொண்டார். 

இந்நிலையில் ஜடேஜாவிடம் ஹிந்தியில் கேள்வி கேட்டதற்காகப் பலரும் ஹர்ஷாவை விமரிசித்தார்கள். இதையடுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் ஹர்ஷா போக்ளே.

இதுகுறித்து பல எதிர்வினைகள் வந்துள்ளதால் விளக்கம் அளிக்கிறேன். பரிசளிப்பு விழாவில், வீரர்களுக்கு உகந்த மொழியில் தான் பேட்டியெடுப்போம். ஜடேஜாவைக் கடந்த 10 வருடங்களாகத் தெரியும். ஆனால் அவரால் ஆங்கிலத்தில் பதில் அளிக்க முடியும் என்று உணர்த்திய பிறகு, நானும் ஆங்கிலத்துக்கு மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.