ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், மும்பையில் ஜனவரி 14 அன்று தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். மேக்ஸ்வெல்லின் நீக்கம் ஆச்சர்யப்படுத்தினாலும் அவர், பிபிஎல் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்டில் கலக்கி வரும் மார்னஸ் லபுசானே ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். ஜோஷ் ஹேஸில்வுட், சீன் அபாட், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), சீன் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், மார்னஸ் லபுசானே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


