நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆண்டர்சன் நீக்கம்: 2 ஆஷஸ் டெஸ்ட்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:58 am

Raghavendran

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றிபெற்றுள்ளது. இதனால் 1-1 என இந்த தொடர் தற்போது சமனில் உள்ளது.

இந்நிலையில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்பட்டார். 

3 டெஸ்ட்களில் மட்டுமே விளையாடியுள்ள ஓவர்டன், கடந்த 2018 மார்ச் ஆக்லாந்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக விளையாடியிருந்தார். 

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:

ஜோ ரூட் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ராரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லி, ஜேக் லீச், கிரெய்க் ஓவர்டன், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தொடர்ச்சியாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஆண்டர்சன், முதல் டெஸ்டில் சில ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.