நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து...

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:45 am

எழில்

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கியப் பயிற்சியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்தில் நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடனான கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன். என் திட்டங்கள் குறித்து இப்போது கூறமாட்டேன். என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்துள்ளது. இன்று நடைபெற்ற பிசிபி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவும் திட்டமிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.