நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

உலகக் கோப்பைக்கான ஆஸி. அணி அறிவிப்பு: இரு முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!

ஃபிஞ்ச் தலைமையிலான இந்த அணியில் ஸ்மித், வார்னர் இடம்பெற்றிருந்தபோதும்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:40 am

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஞ்ச் தலைமையிலான இந்த அணியில் ஸ்மித், வார்னர் இடம்பெற்றிருந்தபோதும் கடந்த சில மாதங்களாகச் சிறப்பாக விளையாடி வரும் ஹேண்ட்ஸ்காம்ப், டர்னர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. இது ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது. அதேபோல மாற்று விக்கெட் கீப்பரும் தேர்வு செய்யப்படவில்லை. ஹேஸில்வுட்டுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆஸி. அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜை ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நைல், ஜேஸன் பெஹ்ரென்டார்ஃப், ஆடம் ஸாம்பா, நாதன் லயன்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.