தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆஃப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்: ரித்திமான் சாஹா

ஆஃப்கானிஸ்தானுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

Raghavendran

ஆஃப்கானிஸ்தானுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டித் தொடரின் குவாலிஃபையர் போட்டியின் போது விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஃப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் சாஹா பங்கேற்பது கேள்விக்குரியாகியுள்ளது.

இதுகுறித்து ரித்திமான் சாஹா கூறியதாவது:

எனக்கு ஏற்பட்ட காயம் தீவிரமாகத்தான் உள்ளது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் எக்ஸ்ரே எடுத்த பின்னர் தான் ஆபரேஷன் செய்வது தொடர்பாக தெரிவிப்பதாக பிசிசிஐ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டி என்றில்லாமல் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருப்பது வருத்தம்தான். கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற உள்ளூர் ஆட்டத்தில் பங்கேற்காதது கூட வருத்தமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு முக்கியம்தான்.

ஆஃப்கானிஸ்தான் போட்டிக்குள் நான் முழு உடல் தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை இல்லை. எனவே அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான். இதுகுறித்து இந்திய அணித் தேர்வாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் நான் பங்கேற்கவில்லை என்றால் எனக்கு கூடுதல் ஓய்வு கிடைக்கும். எனவே இங்கிலாந்து தொடரில் நன்கு செயல்பட முடியும். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.