காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் மாசி மக நான்காம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் ராஜவீதிகளில் வீதி உலா வந்தார்.
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் மாசி மக பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக காலை மாலை வேளைகளில் காஞ்சி காமாட்சி அம்மன் லக்ஷ்மி தேவி சரஸ்வதியுடன் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று நான்காம் நாள் காலை உற்சவத்தில் தங்கச் சூரிய பிரபை வாகனத்தில் மெரூன் பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் ராஜ வீதிகளில் வலம் ஒன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சங்கர மடம் அருகே காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமாட்சி அம்பாளுக்குப் பழங்கள் வைத்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். மேலும் தங்க ஜடை, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை மனம் உருகி வேண்டிச் சிறப்புத் தீப ஆராதனையைத் தரிசித்தார். இதனைத் தொடர்ந்து குங்கும பிரசாதம், அன்னதான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
Summary
During the fourth day of the Masi Maha festival of the Kanchi Kamakshi Amman Temple, Goddess Kamakshi Amman paraded through the royal streets with Goddess Lakshmi Saraswati on a golden sun-filled chariot.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



