கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சாய்னா நேவால் சரியான பாதையில் பயணிக்கிறார்: பி.வி.சிந்து வாழ்த்து

போட்டியாளரான சாய்னா நேவால் சரியான பாதையில் பயணிப்பதாக நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:58 pm

Raghavendran

21-ஆவது காமன்வெல்த் பாட்மிண்டன் மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார். பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை தக்க வைத்தார்.

இந்நிலையில், இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இதில் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சாய்னா நேவால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சரியான பாதையில் பயணிக்கிறார். காமன்வெல்த் தங்கம் மற்றுமல்லாமல் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். 

காமன்வெல்த் இறுதிப்போட்டி சிறப்பாக அமைந்தது. இருப்பினும் அதில் தோல்வியுற்றதில் எனக்கு வருத்தம்தான். இருப்பினும் கடந்த காமன்வெல்த் போட்டியை விட இதில் சிறப்பாகவே செயல்பட்டேன். அடுத்த காமன்வெல்த் போட்டியில் இதைவிட சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

நான் எனது ஆட்டத்திறனை மேலும் வலுப்படுத்தி களமிறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒற்றையர் போட்டிகளில் களமிறங்குவது எனக்கு சரியாக அமைகிறது. காயம் இருப்பினும் அதிலிருந்து மீண்டு விளையாடுவது சவாலாக இருந்தது. இருந்தபோதும் நான் எனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதில் திருப்தியாக உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.