கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கார் விபத்தில் சிக்கிய முகமது ஷமிக்கு தலையில் பலத்த காயம்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கினார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:34 pm

Raghavendran

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டேராடூனில் இருந்து தில்லிக்கு சாலை வழியாக தனது காரில் பயணம் செய்த ஷமிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 5:30 மணியளவில் முகமது ஷமி பயணம் செய்த கார் பின்புறத்தில் சரக்கு லாரி மோதியது. இதனால் முகமது ஷமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முகமது ஷமிக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது, தற்போது ஓய்வு எடுத்து வருவதாக சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மனைவி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், முகமது ஷமிக்கு பிசிசிஐ அடுத்த சீசனுக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள 'கிரேட் பி' ஒப்பந்தம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.