தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சச்சின் மகன் தேர்வு

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:14 pm

Raghavendran

இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி அங்கு 4 நாள் ஆட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், சமீபகாலமாக இந்திய அணியின் வலைப்பயிற்சியின் போது வீரர்களுக்கு பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல சமீபத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணிக்காக விளையாடி உள்ளூர் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தில்லியைச் சேர்ந்த அனுஜ் ராவத் தலைமையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான 4 நாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் அர்ஜுன் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு முன்னாள் வீரர் டபள்யூ.வி.ராமன் தலைமைப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியளித்த இப்பிரிவிலான இந்திய அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

4 நாள் ஆட்டத்துக்கான இந்திய அணி:

அனுஜ் ராவத் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அதர்வா தைடே, தேவ்தத் படிக்கல், ஆர்யன் ஜுயல் (துணைக் கேப்டன், விக்கெட் கீப்பர்), யாஷ் ராதோட், ஆயுஷ் பதோனி, சமீர் சௌத்ரி, சித்தார்த் தேசாய், ஹர்ஷ் தியாகி, ஒய்.டி.மங்வானி, அர்ஜுன் டெண்டுல்கர், நேஹல் வதேரா, ஆகாஷ் பாண்டே, மோஹித் ஜங்கரா, பவன் ஷா.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஆர்யன் ஜுயல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், அதர்வா தைடே, யாஷ் ராதோட், ஆயுஷ் பதோனி, சமீர் சௌத்ரி, சித்தார்த் தேசாய், ஹர்ஷ் தியாகி, ஒய்.டி.மங்வானி, அஜய் தேவ்காட், ஒய்.ஜெய்ஸ்வால், மோஹித் ஜங்ரா, ஆகாஷ் பாண்டே, பவன் ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.