தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அணிக்கு திரும்பினார் சுரேஷ் ரெய்னா: இந்தியா முதல் பேட்டிங்

ஜோஹன்னஸ்பர்க் டி20-யில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் இடம்பிடித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:17 pm

Raghavendran

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா வந்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. 

இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எஞ்சியுள்ள டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் காண உள்ளன. 

இந்நிலையில், முதல் டி20-யில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்குப் பிறகு சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயதேவ் உனத்கட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.