தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மெல்போர்ன் டெஸ்ட்: 399 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா

 292 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு பின்னடைவை ஏற்படுத்தியது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:00 pm

Raghavendran

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றிபெற்றன. 

இதையடுத்து இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிச.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக ஆடிய புஜாரா 106 ரன்கள் குவித்தார். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்குச் சுருண்டது. சிறப்பாக பந்துவீசி ஆஸி. அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இந்நிலையில், 292 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. அதிகபட்சமாக அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 42 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 399 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 4-ஆம் நாள் உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.