தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

டெஸ்ட் போட்டி தான் ஒரு வீரரை சரியாக சோதிக்கக் கூடியது: ராகுல் டிராவிட்

டெஸ்ட் போட்டி தான் ஒரு வீரரின் திறமையை சரியாக சோதிக்கக் கூடியது என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்தார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:57 pm

Raghavendran

டெஸ்ட் போட்டி தான் ஒரு வீரரின் திறமையை சரியாக சோதிக்கக் கூடியது என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்தார். இதுகுறித்து 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:

கிரிக்கெட் போட்டிகளிலேயே டெஸ்ட் போட்டி தான் சவால் நிறைந்தவை. என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதுதான் மிகப்பெரிய தன்னிறைவை ஏற்படுத்தும். ஒரு வீரரை டெஸ்ட் போட்டி தான் சரியாக சோதிக்கும். டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், திறமை ரீதியாகவும் நமக்கு மிகப்பெரிய சவால்கள் நிறைந்ததாக அமையும். 

நம்மை சோதித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதுதான் மிகச்சரியாக இருக்கும் என இளம் வீரர்களுக்கு எப்போதும் வலியுறுத்துவேன். அது பல வீரர்களுக்கு நிறைவேறுவதில்லை. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது இலக்காக வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்ளன. அவையும் எனக்கும் மிகவும் பிடித்தமானவை, மிகவும் சவால் நிறைந்தவை. இதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து ரக போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு விராட் கோலி போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம் ஆவார்கள். ஏனெனில் அது சவால் நிறைந்தது, மிகவும் கடினமானது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.