தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கோலியும் காலி: தடுமாறும் இந்தியா

43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 72 ரன்கள் சேர்த்தார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:54 pm

Raghavendran

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70 ரன்கள் சேர்த்தனர். இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 72 ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 287 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கி இந்திய அணி தடுமாறி வருகிறது. 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ராகுல் 0, முரளி விஜய் 20, புஜாரா 4, விராட் கோலி 17 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். ரஹானே மற்றும் விஹாரி தற்போது களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.