தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்தியாவுக்கு எதிராக இரு அரிய சாதனைகள் படைத்த நாதன் லயன்

ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் இந்த தொடரில் தற்போது வரை அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:54 pm

Raghavendran

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் இந்த தொடரில் தற்போது வரை அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக இரு அரிய சாதனைகளையும் படைத்தார். அதன் விவரம் பின்வருமாறு:

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

  • ஜேம்ஸ் ஆண்டர்சன் - 110 விக்கெட்டுகள்
  • முத்தையா முரளிதரன் - 105 விக்கெட்டுகள்
  • இம்ரான் கான் - 94 விக்கெட்டுகள்
  • நாதன் லயன் - 77 விக்கெட்டுகள்
  • மால்கம் மார்ஷல் - 76 விக்கெட்டுகள்
  • ஸ்டூவர்ட் பிராட் - 70 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:

  • முத்தையா முரளிதரன், நாதன் லயன் - 7 முறை
  • இம்ரான் கான், இயன் போத்தம், மால்கம் மார்ஷல் - 6 முறை
  • ரிச்சி பெனாட், டேல் ஸ்டெயின் - 5 முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.