தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆஸ்திரேலியா 326-க்கு ஆட்டமிழப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:53 pm

Raghavendran

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 2-ஆவது நாளில் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58, ஆரோன் பிஞ்ச் 50 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 6 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 12 பந்துகளைச் சந்தித்த முரளி விஜய் டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மிட்செல் ஸ்டார்க் அவரை க்ளீன் போல்டாக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.