நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம்: அட்டவணை வெளியீடு!

அடிலெய்டில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக இருக்கவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினாலும்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:53 pm

எழில்

இந்த வருட இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

நவம்பர் 21 முதல் 25 வரை முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதன்பிறகு ஆரம்பமாகும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 முதல் ஜனவரி 7 வரை நடைபெறுகிறது. ஜனவரி 12 முதல் தொடங்கவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 18-ல் நிறைவுபெறுகிறது. 

அடிலெய்டில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக இருக்கவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினாலும் பிசிசிஐ இதுவரை அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை

டி20 தொடர்

முதல் டி20: நவம்பர் 21, பிரிஸ்பேன்
2-வது டி20: நவம்பர் 23, மெல்போர்ன்
3-வது டி20: நவம்பர் 25, சிட்னி

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்ட்
2-வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பெர்த்
3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்
4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் ஆட்டம்: ஜனவரி 12, சிட்னி
2-வது ஒருநாள் ஆட்டம்: ஜனவரி 15, அடிலெய்ட்
3-வது ஒருநாள் ஆட்டம்: ஜனவரி 18, மெல்போர்ன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.