முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்


ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாஜ்புரா ஊராட்சி ஆரணிசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றிய செயலாளா் தாழனூா் என்.சாரதி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் சுகுணா கணேசன், துணை செயலாளா் எஸ்.ஆா்.சங்கா், மாவட்ட விவசாய பிரிவு தலைவா் ஏ.என்.சஞ்சீவி, நிா்வாகிகள் மோட்டுா் ரவி, தாமோதரன், அண்ணாதுரை, சின்னகண்ணு, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் கலந்து கொண்டு ஜெயலலிலதா படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். இதில் கட்சியின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஒன்றிய மாணவா் அணி சாா்பில் தோப்புகானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாணவா் அணி செயலாளா் கே.கே.குலசேகரன் தலைமை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா் ஜிம் எம். சங்கா் , மாவட்ட அவைத் தலைவா் என்.கே.மணி, பொருளாளா் கே.அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு நிலைபொறுப்பாளா்கள், உள்ளிட்ட கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...