சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தியாவில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வெல்லுமா நியூஸிலாந்து? 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற நியூஸிலாந்து தீவிரம் காட்டி வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:59 pm

Raghavendran

இந்தியா சுற்றுப்பயணம் செய்த நியூஸிலாந்து அணி முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலைப் பெற்றது நியூஸிலாந்து.

இதையடுத்து புணேவில் நடந்த 2-ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது இந்தியா. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை பெற்றது.

இந்நிலையில், 3-ஆவது ஒருநாள் போட்டி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. 

இதில் வெற்றிபெற்று இந்தியாவில் முதல் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க நியூஸிலாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது. அதுபோல சமீபத்தில் நடந்த 9 தொடர்களில் 8-ல் வென்றுள்ள இந்தியா, இந்த 10-ஆவது தொடரின் மூலம் தனது 9-ஆவது தொடரை வெல்ல திட்டமிட்டுள்ளது.

3-ஆவது ஒருநாள் சுவாரஸ்யங்கள்:

கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் நடக்கும் முதல் பகலிரவு ஒருநாள் போட்டி இதுவே ஆகும்.

இந்தப் போட்டியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தால், 2011-ம் ஆண்டில் மொத்தம் குவித்த 1381 ரன்களை கடக்க முடியும். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகபட்ச ரன்கள் குவித்த தனது சொந்த சாதனையை முறியடிக்க முடியும்.

இந்திய மண்ணில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனின் கடந்த 12 ஒருநாள் போட்டிகளின் சராசரி 30.36 தான். மேலும் இந்தியாவில் விளையாடிய போட்டிகளில் அவர் ஒருமுறை மட்டுமே அரைசதம் கடந்துள்ளார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா 1 விக்கெட் எடுக்கும் பட்சத்தில் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைப்பார். முன்னாள் வீரர் அஜித் அகார்கர் 23 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.