வைச்சா குடுமி, அடிச்சா மொட்டை: டெல்லி அணியின் சரிவுக்குக் காரணம்!
திறமையான இளம் வீரர்கள், அருமையான பந்துவீச்சு கொண்ட டெல்லி அணியால் பிளேஆஃப்-புக்கு முன்னேறமுடியவில்லை...


அடித்தால் 200; இல்லாவிட்டால் 60 சொச்சம் ரன்களில் ஆல் அவுட்! இந்தப் போக்குதான் டெல்லி அணியை பிளேஆஃப் போட்டிக்குத் தகுதிபெறமுடியாமல் செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்தார். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி 5-ஆவது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி 3-ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளும் பிளேஆஃப்-புக்கான போட்டியில் இல்லை.
திறமையான இளம் வீரர்கள், அருமையான பந்துவீச்சு கொண்ட டெல்லி அணியால் பிளேஆஃப்-புக்கு முன்னேறமுடியவில்லை. சீராக ரன்கள் குவிக்காததே அந்த அணியின் பெரிய பலவீனமாக உள்ளது.
ஒன்று அதிக ரன்கள் எடுப்பது இல்லாவிட்டால் மிகக்குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆவது என்கிற மோசமான அணுகுமுறையால் நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளது.
டெல்லி அணியின் கடந்த 5 போட்டிகளின் முடிவுகள்:
பஞ்சாப்புக்கு எதிராக - 67 ஆல்அவுட் - தோல்வி
ஹைதராபாத்துக்கு எதிராக - 189/4 (19.1 ஓவர்கள்) - வெற்றி
குஜராத்துக்கு எதிராக - 214/3 (17.3 ஓவர்கள்) - வெற்றி
மும்பைக்கு எதிராக - 66 ஆல் அவுட் - தோல்வி
குஜராத்துக்கு எதிராக - 197/8 - வெற்றி
ஓர் அணி இப்படி ஆடினால் எப்படிச் சாதகமான முடிவுகள் கிடைக்கும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...