அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.
மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி. தனது முந்தைய ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்த உற்சாகத்தில் களமிறங்கியது ஆஸ்திரேலியா.
26-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கோல் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். ஆனால் உடனே ஆஸ்திரேலியா பதில் கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்று சமமாக இருந்தன.
இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இது இந்திய அணிக்குப் பின்னடைவாக ஆனது.
மூன்றாவது காலிறுதியில் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா. அடுத்தக் காலிறுதியில் மற்றொரு கோல் அடித்து இறுதியில் 3-1 என்கிற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


