சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
இதையடுத்து வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் வங்கதேசத்தை இந்திய அணி சந்திக்கவுள்ளது.
பாகிஸ்தானுடன் ஜெயித்த அதே எக்பாஸ்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக மழையைச் சந்தித்த மைதானங்களில் முதன்மையானது எக்பாஸ்டன் மைதானம். இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் வியாழன் அன்று 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். மேலும் அன்றைய தினம் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் வெயில் நன்கு காயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டம் அவ்வப்போது தென்படும். ஆனால் வெயில்தான் பெரும்பாலும் கொளுத்தும். அன்றைய தினம் மழை பெய்யவோ சட்டென்று வானிலை மாறி ரசிகர்களைக் கடுப்பேற்றவோ வாய்ப்பில்லை என்கிற வானிலை ஆராய்ச்சி மையம்.
அப்பாடா, டக்வொர்த் லீவிஸ் கணக்குகள் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: 337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

தமிழகம், மேகாலயத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


