தென் ஆப்பிரிக்க வீரர்களையும் அந்த நாட்டு ரசிகர்களையும் பார்த்தால் பாவமாகத்தான் உள்ளது. அதே சோகக் காட்சிகள் ஒவ்வொரு ஐசிசி போட்டியிலும் தொடர்கின்றன. இதற்கான முடிவுதான் என்ன?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.
இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஐசிசி ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 8 முறையும், தென் ஆப்பிரிக்கா 4 முறையும் வெற்றி கண்டுள்ளன. அதில் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை தென் ஆப்பிரிக்காவுடன் 4 ஆட்டங்களில் மோதியுள்ள இந்திய அணி, அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளது.
இதில் உள்ள பெரிய சோகம், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. அதேபோல பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவுகளிலும் தென் ஆப்பிரிக்க வீரர்களான டி வில்லியர்ஸ், ரபடா ஆகிய இருவரும் முதலிடம் வகிக்கிறார்கள்.
அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸின் மோசமான பேட்டிங் அணியை மிகவும் பாதித்துள்ளது. இந்தப் போட்டியில் அவருடைய சராசரி: 6.60. இதுபோல மோசமாக அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடியதில்லை.
தெ. ஆ அணியின் தொடக்க வீரர் குயின் டி காக், இந்தியாவுக்கு எதிரான 10 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களும் ஒரு அரை சதமும் எடுத்துள்ளார். அவராலும் அரை சதம் எடுத்தும் அணியைக் காப்பாற்றமுடியாமல் போனது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை அந்த அதிர்ஷ்டம் கிடைக்காமல் போய்விட்டது.
2015 50 ஓவர் உலகக்கோப்பைப் போட்டியில் டி வில்லியர்ஸ், மில்லர் ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனார்கள். அதேபோல இருவரும் நேற்று ரன் அவுட் ஆகி தெ.ஆ. ரசிகர்களைக் கடுப்பேற்றினார்கள். இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 3 பேர் ரன் அவுட்டாயினர். குறிப்பாக டிவில்லியர்ஸ், மில்லர் ஆகியோரின் ரன் அவுட் தென் ஆப்பிரிக்காவுக்குப் பின்னடைவாக அமைந்தது.
பல ஆண்டுகளாக, தென் ஆப்பிரிக்க அணியால் ஐசிசி போட்டியை வெல்ல முடிந்ததில்லை. 1998ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது தெ.ஆ அணி. அதுதான் அந்த அணி இதுவரை வென்ற ஒரே ஒரு ஐசிசி போட்டி. அதற்குப் பிறகு தெ.ஆ. அணி விளையாடிய ஐசிசி போட்டிகளில் முக்கியமான கட்டங்களில் மோசமாக விளையாடி வெளியேறியுள்ளது. 1999 உலகக்கோப்பையில் பெற்ற தோல்வி இன்றுவரை அந்த நாட்டு ரசிகர்களால் மறக்கமுடியாததாக உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியால் ஐசிசி போட்டியை வெல்ல முடியுமா? 2019 உலகக்கோப்பையை? பல ஆண்டுகளாக வெற்றிக்குக் காத்திருக்கும் அந்த நாட்டு ரசிகர்களுக்கு விடிவுகாலம்தான் உண்டா?
2015 உலகக்கோப்பைக்குப் பிறகு விஸ்வரூபம் கொண்ட இங்கிலாந்து அணி போல தென் ஆப்பிரிக்க அணியும் தனது உத்திகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே ஐசிசி கோப்பை குறித்து கனவு காண்பது நியாயமாக இருக்கும். பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு! - தவெக வேட்பாளா் குற்றச்சாட்டு

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


