ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வெற்றிக்காக வீரர்கள் வேதனைப்படும்படி பேசியாக வேண்டும்: விராட் கோலி

இலங்கையுடன் மோசமாகத் தோற்ற இந்திய அணி ஒரே நாளில் சிறப்பாக விளையாடியது எப்படி?

News image
Updated On :12 ஜூன் 2017, 6:51 am

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இதையடுத்து வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் வங்கதேசத்தை இந்திய அணி சந்திக்கவுள்ளது.

இலங்கையுடன் மோசமாகத் தோற்ற இந்திய அணி ஒரே நாளில் சிறப்பாக விளையாடியது எப்படி? என்ன சொல்லி அணி வீரர்களை இந்தப் போட்டிக்கு கோலி தயார்ப்படுத்தினார்? இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கோலி கூறியதாவது:

என்ன நடந்துள்ளது என்பதை வெளிப்படையாகப் பேசவேண்டும். சிலசமயங்களில் வீரர்கள் வேதனைப்படும்படியும் பேசியாக வேண்டும். அப்படிப்பட்ட அறிவுரைகளைச் சொல்வதையே நான் நம்புகிறேன். நான் உள்பட நம் அணி என்ன தவறு செய்தது என்பதை வெளிப்படையாகப் பேசி அதை உணர்வது நம் கடமை. சிறப்பான பங்களிப்பை அளிக்கவே கோடிக்கணக்கான மக்களில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். 

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்க முடியாது. ஓர் அணியில் இரண்டு மூன்று பேர் மட்டும் பங்காற்றமுடியாது. எல்லோரையும் பங்களிக்க கோரினோம். அதேபோல தெ.ஆ.-வுக்கு எதிரான ஆட்டத்தில் அனைவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

தோல்விக்குப் பிறகு என்னென்ன தவறுகள் நடந்துள்ளன என்று வீரர்களிடம் பேசியாகவேண்டும். அதேசமயம் அவர்களை ஒரேடியாகக் குறை சொல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். அவர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் என்ன மாதிரியான தரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். கூடுதாக சில விஷயங்களை மட்டும் அவர்களிடம் சொல்லி ஊக்கப்படுத்தவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.