பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து போட்டி சாத்தியமா?

ஒருவேளை இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிற சூழலும் உருவாகலாம். அதற்கு பாகிஸ்தானோ இலங்கையோ அசாத்தியமான முயற்சிகளை...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

எழில்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா. இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆவது அரையிறுதியில் வங்கதேசத்தை இந்திய அணி சந்திக்கவுள்ளது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் ரேட் +1.370 ஆகும். திங்கள்கிழமை நடைபெறும் இலங்கை-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் எந்த அணி வென்றாலும், இந்தியாவின் ரன் ரேட்டை எட்டுவது கடினம். எனவே பி பிரிவில் இந்தியாவின் முதலிடம் உறுதியாகியுள்ளது. அதனால் ஏ பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்த வங்கதேசத்துடன் அரையிறுதியில் மோதுகிறது இந்தியா.

இலங்கை-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி, ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணியை முதல் அரையிறுதியில் சந்திக்கவுள்ளது. இந்த ஆட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஒருவேளை இந்தியா இங்கிலாந்துடன் மோதுகிற சூழலும் உருவாகலாம். அதற்கு பாகிஸ்தானோ இலங்கையோ அசாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

பாகிஸ்தான் 265+ ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை 294+ ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி 2-ம் இடத்துக்குக் கீழிறங்கும். அதன்படி இங்கிலாந்துடன் மோதவேண்டிய நிலைமை உருவாகும். 

ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்பதால் அரையிறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அ இலங்கை, இந்தியா - வங்கதேசம் என்றுதான் போட்டிகள் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.