சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை. ஷிகர் தவன் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தபோதும், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.
ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவன் அடித்த 10-வது சதமாகும். இதன்மூலம் அதிவேகமாக 10 சதங்கள் (77 இன்னிங்ஸ்) அடித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தார். அதிவேக 10 சதங்கள் எடுத்த அடுத்த இந்திய வீரர் விராட் கோலி. அவர் 80 இன்னிங்ஸ்களில் 10 சதங்களைப் பூர்த்தி செய்தார்.
இதுதவிர இங்கிலாந்து மண் ஷிகர் தவனுக்கு ராசியாக அமைந்துள்ளது. அங்கு விளையாடிய ஒருநாள் போட்டியில் 79 ரன்களைச் சராசரியாகக் கொண்டுள்ளார் தவன். இங்கிலாந்தில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த வெளிநாட்டு வீரர்களில் ஷிகர் தவன் தான் அதிக சராசரிகளைக் கொண்டுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் மேற்கிந்திய வீரரும் கிரிக்கெட் பிரபலமுமான ரிச்சர்ட்ஸ் உள்ளார். தவன் 11 ஆட்டங்களில் 711 ரன்கள் எடுத்து 79 சராசரியைக் கொண்டுள்ளார். ரிச்சர்ட்ஸ் 31 ஆட்டங்களில் 1345 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 64.04.
இங்கிலாந்தில் அதிக சதம் எடுத்த வெளிநாட்டு வீரர்களில் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் உள்ளார். ரிச்சர்ட்ஸ் நான்கு சதங்கள் எடுத்துள்ளார். இரண்டாம் இடத்தில் 3 சதங்களுடன் தவன் உள்ளார். சச்சினும் இங்கிலாந்தில் விளையாடிய 26 ஒருநாள் ஆட்டங்களில் 3 சதங்கள் எடுத்துள்ளார். இதனால் ரிச்சர்ட்ஸின் சாதனையை தவன் விரைவில் மிஞ்சுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


