இரட்டை ஆதாயம் தொடர்பாக தன் நிலையைத் தெளிவுபடுத்துமாறு பிசிசிஐக்கு ராகுல் டிராவிட் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் நிலவி வரும் சூப்பர் ஸ்டார் கலாசாரம், இரட்டை ஆதாய விவகாரத்தில் தீர்வு காணாதது, அனில் கும்ப்ளேவின் விவகாரத்தை கையாண்டவிதம் ஆகியவற்றின் காரணமாகவே பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா சமீபத்தில் அறிவித்தார். சுநீல் கவாஸ்கர், செளரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோர் இரட்டை ஆதாயம் தரும் பதவிகளை அனுபவித்து வருகிறார்கள் என்றும் அவர் சாடினார்.
முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த குஹா, பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவரும், முன்னாள் சிஏஜி தலைவருமான வினோத் ராய்க்கு எழுதியுள்ள 7 பக்கக் கடிதத்தில் ராகுல் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்களை விமரிசனம் செய்திருந்தார். இதுகுறித்து தன் கடிதத்தில் அவர் கூறியதாவது:
இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட், பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஸ்ரீதர் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் முறையே டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக பணியாற்ற பிசிசிஐ அனுமதிக்கிறது. பிசிசிஐ நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது முதல் இதுவரையில் இரட்டை ஆதாயம் தரும் பதவி தொடர்பான விவகாரங்களில் தீர்வு காணப்படவில்லை. அது தொடர்பாக நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்றார்.
இதையடுத்து தன் நிலையைத் தெளிவுபடுத்தும்படி பிசிசிஐக்கு ராகுல் டிராவிட் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து டிராவிட் கூறியதாவது:
ஆமாம். பிசிசிஐயின் நிர்வாகக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். பிசிசிஐ விதிமுறைகளின்படி என்னுடைய பதவியில் இரட்டை ஆதாயம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் விதிமுறையை நடுவில் மாற்றியிருந்தால் அதை வைத்து நான் இரட்டை ஆதாயம் அடைவதாகக் குற்றம் சுமத்துவது சரியல்ல.
விதிமுறை மாற்றப்பட்டிருந்தால் அதை எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். எனவே இரட்டை ஆதாயம் தொடர்பாக என் நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு பிசிசிஐ நிர்வாகக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்று டிராவிட் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


