பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2013-ல் சச்சின்; 2017-ல் தயான் சந்த்?

ஹாக்கி வீரர் தயான் சந்துக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பிரதமருக்குக் கடிதம்...

News image
Updated On :7 ஜூன் 2017, 12:09 pm

ஹாக்கி வீரர் தயான் சந்துக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுசேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்று நடைமுறையில் இருந்த விதியை மாற்றி, எந்தவொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மனித முயற்சியின் உயரிய அர்பணிப்புக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று சிலவருடங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய அரசு. 

இந்த விருதுக்குப் பிரதமர் முடிவெடுத்து குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பார். விருது பெற்றவருக்கு குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 3 பேருக்கு (மட்டுமே) இந்த விருதை வழங்க முடியும். 

Story image

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ அதுபோல ஒருகாலத்தில் தன்னுடைய அசாத்திய திறமையால் ஹிட்லர் வரை பேசப்பட்டவர் தயான் சந்த். ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில், இந்தியா மூன்று முறை தங்கப் பதக்கம் பெற இவரின்றி வேறு யாரும் காரணம் கிடையாது. (அதில், ஒருமுறை கேப்டனாக இருந்தார்). சர்வதேசப் போட்டிகளில் ஆயிரம் கோல்கள் அடித்த சாதனையாளர். இவருடைய பிறந்தநாளான ஆகஸ்ட் 29, இந்திய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தத் தினத்தில்தான் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. தயான் சந்த் பெயரில் ஒரு விருதும் வழங்கப்படுகிறது. 1905-ம் ஆண்டில் பிறந்தவர், தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.

தயான் சந்துக்குப் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்கிற பெருமையை அடைந்தவர், சச்சின். 2013-ம் ஆண்டு பாரத ரத்னா விருது சச்சினுக்கு அறிவிக்கப்பட்டது. அவர், 40 வயதில் இளைய பாரத ரத்னாவானார்.

இந்நிலையில் தயான் சந்துக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து இந்தமுறையாவது எதிர்பார்த்த அறிவிப்பு நிகழுமா என்கிற ஆவல் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.