ஸ்டார் டிவி தொகுப்பாளர் மயந்தி லாங்கர் பற்றி நேற்று பலரும் ஓயாது பேசினார்கள். அவரது உடையைப் பற்றிய விவாதங்கள் பலதரப்பட்ட கருத்துகளையும் மீம்களையும் சமூகவலைத்தளத்தில் உருவாக்கின.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவியான மயந்தி லாங்கர், ஸ்டார் டிவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக இப்பணியில் இருப்பதால் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மயந்தி அணிந்து வந்த கவர்ச்சியான உடை சமூகவலைதளத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 2003 உலகக்கோப்பையின் போது மந்திரா பேடி அணிந்த உடைகள் விவாதப்பொருளாக மாறின. அதற்குப் பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தொகுப்பாளரின் உடை பற்றி அதிகம் பேசப்பட்டது நேற்றுதான் என்கிற அளவுக்கு மிக அதிகமான மீம்களும் வெளிவந்தன.
பலர் இந்த உடைக்குக் கண்டனம் தெரிவித்தாலும் மயந்திக்கு ஆதரவும் அதிகம் இருந்தன. மழையினால் அடிக்கடி ஆட்டம் தடைபட்டதால் மயந்தியை நேற்று அதிக நேரம் நிகழ்ச்சியில் காணமுடிந்தது. இதனால் தொடர்ந்து அவரைப் பற்றிய விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் தென்பட்டன. இதனால் ட்விட்டரிலும் இந்திய அளவில் டிரெண்ட் ஆனார்.




தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்

பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்!

நியூசிலாந்து அமைச்சருடன் தாஜ்மஹாலை பார்வையிட்ட பியூஷ் கோயல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


