மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

50-வது டெஸ்ட்: லில்லீயின் நீண்டநாள் சாதனையை முறியடிக்கவுள்ள அஸ்வின்!

இந்த டெஸ்டின் முடிவில் அஸ்வின் லில்லீயின் நீண்டநாள் சாதனை ஒன்றை முறியடித்து முதலிடம் பிடிப்பார்...

News image
Updated On :26 ஜூலை 2017, 5:42 am

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது 50-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது பங்கேற்றுள்ளார்.

காலேவில் இன்று தொடங்கியுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட், அஸ்வினின் 50 டெஸ்ட் போட்டியாகும்.

இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 7 முறை 10 விக்கெட்டுகளையும், ஓர் இன்னிங்ஸில் 25 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின்.

இந்த டெஸ்டின் முடிவில் அஸ்வின் லில்லீயின் நீண்டநாள் சாதனை ஒன்றை முறியடித்து முதலிடம் பிடிப்பார்.

50-வது டெஸ்டின் முடிவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில், டென்னிஸ் லில்லீ முதலிடத்தில் உள்ளார். அவர் 262 விக்கெட்டுகள் எடுத்ததுதான் இன்றுவரை சாதனையாக உள்ளது. ஆனால் அஸ்வின் 49-வது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே காலே டெஸ்டின் முடிவில் லில்லீயின் சாதனையை அஸ்வின் முறியடித்து முதலிடம் பிடிப்பார்.

50 டெஸ்டுகளுக்குப் பிறகு

262 லில்லீ

260 ஸ்டெயின் 

251 டொனால்ட் 

245 முரளிதரன் 

244 வக்கார் யூனுஸ் 

239 மால்கம் மார்ஷல் 

அஸ்வின் - 49 டெஸ்டுகளுக்குப் பிறகு - 275 விக்கெட்டுகள்.

அதேபோல அதிவேக 300 டெஸ்டுகள் என்கிற சாதனையையும் அஸ்வின் விரைவில் நிகழ்த்த வாய்ப்புண்டு. 56 டெஸ்டுகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து இப்பட்டியலில் லில்லீ முதலிடத்தில் உள்ளார். இதை முறியடிக்க அடுத்த 6 டெஸ்டுகளில் 25 விக்கெட்டுகள் எடுத்தால் போதும், மீண்டுமொருமுறை லில்லீயின் சாதனையை அஸ்வின் முறியடித்துவிடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.