மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

முதல் டெஸ்ட்: சன்டிமல் விலகல்; ஹெராத் கேப்டன்!

அதிகாரபூர்வமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து சன்டிமல் விலகியுள்ளார்... 

News image
Updated On :21 ஜூலை 2017, 12:25 pm

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவிலும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கொழும்பிலும், 3-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கண்டியிலும் தொடங்குகிறது.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோற்றதைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சன்டிமலும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக உபுல் தரங்காவும் நியமிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சன்டிமல் விளையாடமாட்டார் என்று அறியப்படுகிறது.

அதிகாரபூர்வமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து சன்டிமல் விலகியுள்ளார். இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு ரங்கனா ஹெராத் கேப்டனாகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.