ஆசியத் தடகளப் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
22- ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லஷ்மணன் 14 நிமிடம் 54.48 நொடிகளில் பந்தைய தூரத்தை எட்டி தங்கத்தை சொந்தமாக்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் சொக்குராணி கிராமத்தைச் சேர்ந்த வீரரான லஷ்மணன் இந்த வெற்றி குறித்து கூறுகையில், 'எப்போதும் ஓரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனாகவும், கடின உழைப்பாளியாகவுமே இருக்க விரும்புகிறேன். அதன் பலனாகவே தற்போது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது' என்றார்.
இந்த வெற்றியின் மூலமாக, லண்டனில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு லஷ்மணன் தகுதிபெற்றுள்ளார்.
போட்டியின் 4-ஆவது நாளில் லட்சுமணன் மற்றொரு தங்கம் வென்றார். லட்சுமணன், 5,000 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்த நிலையில், இப்போது 10,000 மீ. ஓட்டத்திலும் தங்கம் வென்று சாதனை செய்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 10,000 மீ. ஓட்டத்தில் லட்சுமணன் 29 நிமிடம், 55.87 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். இதேபிரிவில் மற்றொரு இந்தியரான கோபி வெள்ளி (29:58.89) வென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் சொக்கூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், உதகையில் உள்ள மெட்ராஸ் (ரெஜிமென்ட்) ராணுவ படைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இரு தங்கப் பதக்கங்கள் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதேபோல 400 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவுக்கு ரூ. 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


