22- ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆடவருக்கான 5000 மீட்டர் மற்றும் 10,000 மீ. ஓட்டங்களில் தமிழக வீரர் லஷ்மணன் தங்கப் பதக்கங்களை வென்றார்.
லட்சுமணனுக்குப் பாராட்டு தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக வீரர் லட்சுமணன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியத் திருநாட்டுக்கே மிகப்பெரிய கெளரவத்தைத் தேடித்தந்துள்ளார்.
அம்மா அவர்களின் ஆட்சியிலேதான் விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, விளையாட்டு வீரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.
விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தனது பொற்கரங்களால் பரிசளித்துப் பாராட்டி அவர்கள் மேலும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக நிதி உதவியும் அளித்து வாழ்த்தினார்கள்.
இன்று தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்த லட்சுமணன் அவர்கள் இதேபோல் பல வெற்றிகள் பெற்று தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமைகள் சேர்க்க வேண்டும் என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புனிதப்பாதையில் நின்று எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


