2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சென்னையில் ஒரு ஐபிஎல் போட்டியும் கிடையாது!

சென்னை சூப்பர் கிங்ஸின் தடைக்காலம் இந்த ஐபிஎல்-லுடன் முடிவடைவதால்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:01 am

எழில்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இதர ஆட்டங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் புணேவில் நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜ்கோட் மைதானத்தில் குஜராத் லையன்ஸ் அணி சந்திக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏப்ரல் 8-ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அதேநாளில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்தூரில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒரு போட்டியும் ஒதுக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸின் தடைக்காலம் இந்த ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் அடுத்த வருடம் சென்னை சேப்பாக்கத்தில் நிச்சயம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.