2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தோனி, கவாஸ்கரின் சாதனைகளை முறியடித்த விராட் கோலி!

தோல்வியின்றி அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்கிற பெருமை...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:00 am

எழில்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி.

இந்திய அணி ஆகஸ்ட் 2015 முதல் தொடர்ந்து 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 2008 முதல் ஜனவரி 2010 வரை வென்ற இந்திய அணியின் 5 டெஸ்ட் தொடர்களின் வெற்றிச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல தோல்வியின்றி அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற பட்டியலிலும் கோலி இடம்பிடித்துள்ளார்.

26 லாயிட் (1982-84)
22 பாண்டிங் (2005-07)
19 இல்லிங்வொர்த் (1969-71)
19 கோலி*

தோல்வியின்றி அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்கிற பெருமையும் கோலிக்குக் கிடைத்துள்ளது. இதில் கவாஸ்கரின் சாதனையைத் தாண்டியுள்ளார் கோலி.

19 விராட் கோலி*
18 கவாஸ்கர் 
17 கபில் தேவ்
14 அசாருதீன்
11 தோனி

அதேபோல தோனி இதுவரை 7 சர்வதேச தொடர்களை (டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவகை கிரிக்கெட்டிலும்) தோல்வியின்றி தொடர்ச்சியாக ஜெயித்ததே இந்திய சாதனையாக இருந்துவந்தது. இப்போது இந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 8 சர்வதேச தொடர்களை வென்ற முதல் இந்திய கேப்டன் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார் கோலி.

9 டெஸ்ட் அணிகளுக்கு எதிராக இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.