ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பிசிசிஐ அனுமதியுடன் விரைவில் ஐபிஎல்-லில் களமிறங்கவுள்ள சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்!

ஐபிஎல் போட்டியில், இடைக்காலத் தடையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள்

News image
Updated On :15 ஏப்ரல் 2017, 10:08 am

ஐபிஎல் போட்டியில், இடைக்காலத் தடையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிசிசிஐயின் அனுமதியுடன் களமிறங்கத் தயாராகிவருகின்றன.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முத்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. தடை இந்த வருட ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மீண்டும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஊடக உரிமம் ஒப்பந்தம் தொடர்பான ஆணைகளை விரைவில் பிசிசிஐ வெளியிடவுள்ளது. ஊடக ஒப்பந்தம் 10 வருடங்களில் இருந்து 5 வருடங்களாகக் குறைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அடுத்தப் போட்டியில் ஆடுவது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், 
ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம். 

ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.