ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பொலார்டின் சீற்றத்துக்கு மஞ்ச்ரேக்கர் பதில்!

பொலார்டின் சீற்றமான பதில் குறித்து மஞ்ச்ரேக்கரிடம் கேள்வி எழுப்பினார் ரவி சாஸ்திரி.

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 10:43 am

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியின் தொலைக்காட்சி வர்ணனையில் பொலார்டைப் பற்றிக் கடுமையாக விமரிசித்தார் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர். அவர் கூறியதாவது: பொலார்ட்டைப் பற்றி எண்ணும்போது அவர் கடைசி ஆறு ஏழு ஓவர்களில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன். அதற்கு முன்பு வந்து ஆடக்கூடிய அளவுக்கு அவருக்கு மூளை கிடையாது என்றார். 

இதை ஏற்றுக்கொள்ளாத பொலார்ட் ட்விட்டரில் மஞ்ச்ரேக்கரை விமரிசனம் செய்தார். உங்கள் வாயிலிருந்து நல்லது ஏதாவது வருமா? ஏனெனில் வாய்க்கு வந்தபடி பேசுவதற்காக உங்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. மூளையில்லாதவர் என்று விமரிசனம் செய்தது என்னை எந்தளவு பாதித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? வார்த்தையை விட்டுவிட்டால் பிறகு அதை மீண்டும் அள்ளமுடியாது என்று மஞ்ச்ரேக்கருக்குப் பதிலடி கொடுத்தார். 

இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் வர்ணனையில் பொலார்டின் சீற்றமான பதில் குறித்து மஞ்ச்ரேக்கரிடம் கேள்வி எழுப்பினார் ரவி சாஸ்திரி. அதற்கு மஞ்ச்ரேக்கர் கூறியதாவது: கிரோன் பொலார்டிடம் இருந்து தள்ளியே நிற்கிறேன். என்னைச் சுற்றிப் பாதுகாவலர்கள் உள்ளார்கள். இந்தத் தொழிலில் நீண்ட நாளாக உள்ளேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்று மஞ்ச்ரேக்கர் பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.