500 டெஸ்டுகள்: முக்கிய திருப்புமுனைகள்!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய அம்சங்களும் திருப்புமுனைகளும்


இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியுள்ளது. இது இந்திய அணி விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும்.
இதுவரை...
499 டெஸ்டுகள்: 129 வெற்றிகள்; 157 தோல்விகள்; 212 டிராக்கள்; 1 டை. வெற்றி சதவிகிதம்: 25. 95%. உள்ளூரில் 249 டெஸ்டுகள், வெளிநாட்டில் 251 டெஸ்டுகள்.
முதல் டெஸ்ட் (1932): லார்ட்ஸ்; இங்கிலாந்து எதிராக 158 ரன்களில் தோல்வி!
100-வது டெஸ்ட் (1967) : பிர்மிங்ஹாம்; இங்கிலாந்துக்கு எதிராக 132 ரன்களில் தோல்வி!
200-வது டெஸ்ட் (1982): லாகூர்; பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் டிரா
300-வது டெஸ்ட் (1996): அஹமதாபாத்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 64 ரன்களில் வெற்றி
400-வது டெஸ்ட் (2006): கின்ஹ்ஸ்டன்; மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 49 ரன்களில் வெற்றி
1-100 டெஸ்டுகள்: வெற்றி: 10; தோல்வி: 40; டிரா: 50
200 டெஸ்டுகள் வரை: வெற்றி: 35; தோல்வி: 72; டிரா: 93
300 டெஸ்டுகள் வரை: வெற்றி: 56; தோல்வி: 98; டிரா: 145
400 டெஸ்டுகள் வரை: வெற்றி: 88; தோல்வி: 129; டிரா: 182
499 டெஸ்டுகள் வரை: வெற்றி: 129; தோல்வி: 157; டிரா: 212.
* முதல் 42 வருடங்களில் இந்திய அணி 19 வெற்றிகளை மட்டுமே பெற்றது (14.50%). அடுத்த 42 வருடங்களில் 110 வெற்றிகள் (29.89%).
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத் திருப்புமுனைகள்
1932 - லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட்
1933 - முதல் டெஸ்ட் சதம் எடுத்த இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார் லாலா அமர்நாத். இங்கிலாந்துக்கு எதிராக. இன்னொரு பெருமை - இந்தியாவின் முதல் உள்ளூர் டெஸ்ட், சென்னையில் நடைபெற்றது.
1952- இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி. சென்னையில் கிடைத்தது.
1971- இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி.
1976: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 403 ரன்கள் இலக்கைக் கடந்து சாதனை செய்தது இந்தியா. இந்தச் சாதனை 27 வருடங்கள் முறியடிக்கப்படாமல் இருந்தது.
1986 - மீண்டும் சென்னைக்கு ஒரு பெருமிதம். டெஸ்ட் வரலாற்றில் 2-வது தடவை டை ஆன டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பங்கேற்றன.
1987: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் கவாஸ்கர்.
1999 - அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்தார்.
2001 - வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தா டெஸ்ட். லஷ்மண், டிராவிட் கூட்டணி இந்தியாவை மீட்டுக்கொடுக்க, ஹர்பஜன் ஹாட்ரிக் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். 2004 - ஷேவாக் இந்தியாவின் முதல் முச்சதத்தை எடுத்தார்.
2005 - அதிக சதங்கள் எடுத்த கவாஸ்கரின் சாதனையை மிஞ்சினார் சச்சின் (35 சதங்கள்)
2009 - இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்தது. 726/9
2013 - 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சாதனை புரிந்த சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
2016 - கோலி தலைமையில் இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டி.
சிறந்த கேப்டன்கள்
1. தோனி (2008 - 2014): 60 டெஸ்டுகள் (27 வெற்றிகள்)
2. கங்குலி (2000 - 2015): 49 டெஸ்டுகள் (21 வெற்றிகள்)
3. அசாருதீன் (1990-1999): 47 டெஸ்டுகள் (14 வெற்றிகள்)
4. சுனில் கவாஸ்கர் (1976 - 1985): 47 டெஸ்டுகள் (9 வெற்றிகள்)
5. நவாப் பட்டோடி (1962 - 1975): 40 டெஸ்டுகள் (9 வெற்றிகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...