/

இந்த ரன் அவுட்டை மறக்கமுடியாது ஜெயந்த் யாதவ்! (வீடியோ)

நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் ஹஸீப் ஹமீது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:44 pm

சநகன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.  

நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் ஹஸீப் ஹமீது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவர் 50 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். ஜெயந்த் யாதவ்வின் அற்புதமான ஃபீல்டிங்கினால் மட்டுமே அந்த ரன் அவுட் சாத்தியமானது. மேலும் தோனி பாணியில் சாஹாவும் புத்திசாலித்தனமாக பந்தை ஸ்டம்பில் எறிந்து ரன் அவுட்டை மேலும் எளிதாக்கினார். வழக்கமாக ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க ஃபீல்டர்கள் மட்டுமே இதுபோல கீழே விழுந்த நிலையில் சரியாக த்ரோ செய்து ரன் அவுட் செய்வார்கள். இப்போது அச்செயலை ஜெயந்த் யாதவும் செய்து இந்திய ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மறக்கமுடியாத ரன் அவுட் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.