நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

4 வருடங்களாக ஐபிஎல்-லில் பெஞ்ச்; டிஎன்பிஎல்-லில் சாதித்துக் காட்டிய பாபா அபராஜித்!

ஐபிஎல் என்பது பலருக்கும் பல கதவுகளைத் திறந்துவைக்கும் வாய்ப்பாக உள்ள நிலையில்...

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

சநகன்

ஐபிஎல் என்பது பலருக்கும் பல கதவுகளைத் திறந்துவைக்கும் வாய்ப்பாக உள்ள நிலையில் சிலருக்கு மட்டும் அணியில் இடம்பெறமுடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. ஐபிஎல்-லில் அப்படி ஒரு துரதிர்ஷ்டம் பாபா அபராஜித்துக்கு ஏற்பட்டது.

2013-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானார் பாபா அபராஜித். U19 உலகக்கோப்பையில் திறமையை வெளிப்படுத்தி அதிகக் கவனம் பெற்றதால் ஐபிஎல்-லிலும் தன்னை நிரூபிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவர்மீது இருந்தது. ஆனால் எல்லாமே நேர்மாறாக நடந்தது. இன்றுவரை ஐபிஎல்-லில் பாபா அபராஜித்துக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை! சிஎஸ்கேவுக்குப் பிறகு புணே அணியில் தேர்வானார் பாபா. இந்த ஐபிஎல்-லில், புணே அணி தொடர்ந்து தோற்றபோதும், பலருக்குக் காயம் ஏற்பட்டு விலகியபோதும்கூட தோனி பாபாவைச் சீந்தவில்லை. அதே பெஞ்ச்!

இந்நிலையில் 4 ஐபிஎல்களுக்குப் பிறகு இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற ஒரு பெரிய போட்டியில் விளையாடி தன் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் பாபா.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அபராஜித் 63 பந்துகளில் (12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) 118 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் முதல் சதம் இது. இதனால் பாபா அபராஜித் மீது அதிக கவனம் குவிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.