சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆடுகளத்தில் 22 வருடங்கள்: சர்வதேச அரங்கில் சாதித்து வரும் தமிழ்ப்பெண் மிதாலி ராஜ்

தமிழ் என் தாய் மொழி... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை...

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:30 am

ச. ந. கண்ணன்


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 22-வது வருடத்தை முடித்துள்ளார். இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும்.

1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 22 வருடங்கள் ஓடிவிட்டன. 

ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிவர்கள்:

22 வருடங்கள் 91 நாள்கள் - சச்சின் டெண்டுல்கர்
22 வருடங்கள்* - மிதாலி ராஜ்
21 வருடங்கள் 184 நாள்கள் - ஜெயசூர்யா

இன்னும் 91 நாள்களில் சச்சின் சாதனையைத் தாண்டிவிடுவார் 38 வயது மிதாலி ராஜ்.

Story image


தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். 

ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 11 டெஸ்டுகளிலும் 214 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

Story image

2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது. தயாரிப்பு - வியாகாம்18 ஸ்டூடியோஸ். 

இந்நிலையில் சபாஷ் மித்து படத்தை இயக்குவதிலிருந்து ராகுல் தொலாகியா விலகினார். அவருக்குப் பதிலாக ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கவுள்ளார். கரோனா சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக ராகுல் தொலாகியா கூறியுள்ளார். 

*

200 ஒருநாள் ஆட்டங்கள்: மிதாலி ராஜின் உலக சாதனை 

பிப்ரவரி 1, 2019. 

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இந்த நாளில் படைத்தார். 

ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தினார் மிதாலி ராஜ். 

மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Story image

டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு

2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர் மிதாலி ராஜ். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.  

2019 செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார். நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் கோப்பைப் போட்டிக்காகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இக்காரணத்துக்காக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று கூறினார். 

32 டி20 ஆட்டங்களிலும் மூன்று டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய மிதாலி, மொத்தம் 2364 ரன்களை விளாசியுள்ளார். 

தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.

இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது: ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமர்சிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார். 

லட்சியம் ஒருநாள் உலகக் கோப்பை

Story image

இந்திய ஒருநாள் கேப்டனாக தற்போது உள்ள மிதாலி ராஜ், நியூசிலாந்தில் அடுத்த வருடம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளார். இதுவே தன்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சாதித்து வா தமிழ்ப்பெண்ணே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.