டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தொடரும் மோதல்: சென்னை டெஸ்டிலும் விராட் கோலியை வீழ்த்தாத ஜேம்ஸ் ஆண்டர்சன்!

2016 முதல் ஆண்டர்சனைத் தோற்கடித்து வருகிறார் கோலி...

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

ச. ந. கண்ணன்

சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாகப் பந்துவீசினார். 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சனால் விராட் கோலியின் விக்கெட்டை மட்டும் வீழ்த்த முடியவில்லை. 

முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் பெஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த கோலி, 2-வது இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

2014-ல் இங்கிலாந்து ஆண்டர்சன் பந்துவீச்சில் நான்கு முறை ஆட்டமிழந்தார் கோலி. 

5 டெஸ்டுகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. 

இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி மிக மோசமாக விளையாடினார். 5 டெஸ்டுகளில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்கள். இரு முறை டக் அவுட் ஆனார். அந்தத் தொடரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் 4 முறை ஆட்டமிழந்தார் கோலி. 50 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் மட்டும் எடுத்தார். சராசரி்: 4.75.

இதற்குப் பிறகு ஆண்டர்சனை வேறுவிதமாக எதிர்கொள்ள ஆரம்பித்தார் கோலி. 2016 முதல் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஒருமுறை கூட அவர் ஆட்டமிழக்கவில்லை.

Story image

2016-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்டுகளில் விளையாடி 0-4 எனத் தோற்றது. இதில் ஒருமுறை கூட ஆண்டர்சனிடம் விக்கெட்டைப் பறிகொடுக்கவில்லை கோலி.

2018-ல் இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணி 1-4 என டெஸ்ட் தொடரில் தோற்றது. 5 டெஸ்டுகளில் 593 ரன்கள் குவித்தார் கோலி. 2 சதங்கள், 3 அரை சதங்கள். இந்தத் தொடரிலும் ஆண்டர்சனின் 270 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்கள் எடுத்தார். ஒருமுறை கூட ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவில்லை. 

இதனால், கடந்த இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணிக்கு மட்டுமல்லாமல் ஆண்டர்சனுக்குப் பெரும் சவாலாக உள்ளார் விராட் கோலி.

சென்னை டெஸ்டிலும் ஆண்டர்சனின் பந்துவீச்சுக்குத் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுக்கவில்லை. 2014-ல் நடைபெற்றதை கோலியால் மறக்க முடியவில்லை. அதனால் ஆண்டர்சன் பந்துவீச்சில் கூடுதல் பொறுப்புடன் விளையாடி வருகிறார். இதனால் 2016 முதல் ஆண்டர்சனைத் தோற்கடித்து வருகிறார் கோலி. இன்னும் மூன்று டெஸ்டுகள் மீதமுள்ளன. இந்த முறையும் கோலிக்கு வெற்றி கிடைக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.