அம்பத்தி ராயுடு ஆக்ரோஷ ஆட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் 182 ரன்கள் குவிப்பு
ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் விளாசினார்.


11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
கடந்த போட்டியில் சதமடித்த துவக்க வீரர் ஷேன் வாட்சன் 9 ரன்களுக்கு ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரரான டூ பிளெஸிஸ் 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் சூப்பர் கிங்ஸ் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தனர். ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் விளாசினார்.
சுரேஷ் ரெய்னா 54 ரன்களுடனும், தோனி 25 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். சன்ரைஸர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...