ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக: சதமடித்த வாட்சன் படைத்த 'விநோத' சாதனை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான சதம் மூலமாக ஷேன் வாட்சன் ஐபிஎல் வரலாற்றில் விநோத சாதனைப் படைத்துள்ளார்.


11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 17-ஆவது லீக் ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து.
சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர் ஷேன் வாட்சன் சதம் விளாசினார். மொத்தம் 57 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரி, 6 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த சதம் மூலம் ஜபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஷேன் வாட்சன், விநோத சாதனையைப் படைத்துள்ளார். அது, தான் விளையாடிய அணிகளுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் ஆனார். முன்னதாக 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...