டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வெளியூர் போட்டிகளில் மட்டும் நன்றாக விளையாடுகிறேனா? ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது...

News image
ஷ்ரேயாஸ் ஐயர்- படம்: ஏபி
Updated On :1 மே 2025, 7:42 am

DIN

பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

சேப்பாக்கில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே 190க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இது குறித்து போட்டிக்குப் பிறகு அவர் கூறியதாவது:

எங்கு விளையாடினாலும் சேஸிங் பிடிக்கும்

எந்தத் திடலிலும் எனக்கு சேஸிங் செய்வதென்றால் பிடிக்கும். மிகப்பெரிய ரன்கள் இலக்காக இருக்கும்போது எனக்கு வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணம் கூடுதலாக இருக்கிறது.

அணிக்காக பொறுப்பேற்பது பிடிக்கும். நான் ஒரு புறம் பொறுமையாக ஆடும்போது மறுபுறத்தில் மற்றவர்கள் அதிரடியாக விளையாடலாம்.

வெளியூர்களில் மட்டுமே நன்றாக விளையாடுகிறேன் என்ற விஷயத்தில் என்ன சொல்லுவது? நான் அதில் சாபம் விட விரும்பவில்லை. நிகழ்காலத்தில் இருந்து பந்திக்கு ஏற்றபடி விளையாட வேண்டும்.

தன்னம்பிக்கை அளித்த பயிற்சி

நான் எங்கு விளையாடுகிறேன் என்பது முக்கியமில்லை. என்னுடைய பாணியில் விளையாடுகிறேன். சில நேரங்களில் அது வேலை செய்கிறது, சில நேரங்களில் செய்வதில்லை.

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் அதிகமாக பயிற்சி எடுத்தேன். அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

குறிப்பாக புதிய பந்தில் பயிற்சி எடுத்ததால் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை கிடைத்தது. இதைதான் நான் மிகவும் கடினமான பயிற்சி செய்து பெற்றேன்.

ஃபீல்டிங்கில் செல்லும்போது நான் எப்போதும் எனது குணாதியத்தை உயர்வாக வைத்திருக்க விரும்புகிறேன். சிறிய சிறிய கட்டங்களை நிரப்பினாலே போதுமானதென நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.