எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.

News image
நிக்கோலஸ் பூரன்- படம் | லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எக்ஸ்)
Updated On :26 ஏப்ரல் 2025, 1:11 pm

DIN

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் 377 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன், விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் அவர் உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்களில் நிக்கோலஸ் பூரன் ஒருவரின் ஸ்டிரைக் ரேட் மட்டுமே 200-க்கும் அதிகமாக உள்ளது. மற்ற வீரர்களின் ஸ்டிரைக் ரேட் 200-க்கும் குறைவாகவே உள்ளது.

ரகசியம் பகிர்ந்த நிக்கோலஸ் பூரன்

கரீபியன் தீவுகளில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இந்தியாவிலும் ஆடுகளங்கள் இருப்பதே தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இங்குள்ள ஆடுகளங்கள் எனது சொந்த மண்ணில் உள்ள ஆடுகளங்களைப் போன்று இருக்கின்றன. கரீபியன் தீவுகளின் ஆடுகளங்களில் அதிக அளவிலான பௌன்சர்கள் இருக்காது. இங்குள்ள ஆடுகளங்கள் உண்மையில் பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளங்கள். இந்தியாவில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஊக்கமளிக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர் விளாசுவதற்காக வேகமாக பேட்டினை சுழற்ற தனியாக எந்த ஒரு பயிற்சியும் நான் மேற்கொள்வதில்லை. வேகமாக பேட்டினை சுழற்றுவது எனக்கு இயல்பாகவே வருகிறது. பேட்டினை வேகமாக சுழற்றுவதன் பின்னணியில் எந்த ஒரு ரகசியமும் இல்லை. பேட்டினை எப்படி வேகமாக சுழற்றுகிறீர்கள் என்ற கேள்வி என்னிடம் மில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளது. பேட்டினை வேகமாக சுழற்ற ஒருபோதும் தனியாக எந்த ஒரு பயிற்சியையும் நான் மேற்கொண்டதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.