ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சன்ரைசர்ஸ் பேட்டிங்; 300 ரன்களா? குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
- படம் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)
Updated On :6 ஏப்ரல் 2025, 2:03 pm

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

இன்றையப் போட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக சன்ரைசர்ஸ் அணியில் ஹர்ஷல் படேல் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜெயதேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிரடி விளையாடுவதை வழக்கமாகக் கொண்ட ஹைதராபாத் அணி, கடந்த இரண்டு போட்டிகளில் 163 ரன்கள் மற்றும் 120 ரன்களுக்கு முறையே ஆட்டமிழந்தது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்றையப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதால் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 300 ரன்களைக் குவித்து வரலாறு படைக்குமா? அல்லது மீண்டும் ஒரு முறை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.